செய்திகள்
மல்லிகார்ஜுன் கார்கே

90 சதவீத இடங்களை பரிந்துரையில் வாங்கி கொடுத்தபின் குறை கூறுவதா?: மல்லிகார்ஜூன் கார்கே

Published On 2020-11-19 17:19 GMT   |   Update On 2020-11-19 17:19 GMT
உங்களுடைய மாநிலத்திற்கு தலைவராக இருந்து கொண்டு 90 சதவீதம் பரிந்துரை பேரில் தொகுதிகளை வாங்கிக் கொடுத்துவிட்டு குற்றம் கூறலாமா? என மல்லியாகர்ஜுன் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
பீகார் மாநில சட்டசபை தேர்தலுடன் பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்றது. மத்திய பிரதேசம் உள்பட இடைத்தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது.

பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்து காங்கிரஸ் போட்டியிட்டது. 70 தொகுதிகளில் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. கூடுதலாக 10 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் மெகா கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும். மெகா கூட்டணியின் தோல்விக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என விமர்சனம் எழும்பியது.

மேலும், கபில் சிபல் வெளிப்படையாக விமர்சனம் செய்திருந்தார். அதன்பின் ப.சிதம்பரமும் ஒருங்கிணைப்பு இல்லை என வெளிப்படையாக குற்றம் சுமத்தினார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான மல்லிகார்ஜுன் கார்கே ‘‘தேர்தலில் தோல்வியடைந்த பின் சில தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது குற்றம் சுமத்துகின்றனர். நீங்கள் உங்களுடைய மாநிலத்தின் தலைவர். உங்கள் தொகுதியின் தலைவர். 90 சதவீத தொகுதிக்கான வேட்பாளர்களுக்கு உங்களுடைய பரிந்துரையின் அடிப்படையில் வாய்ப்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால் தேர்தலுக்கு பின் நீங்கள், அங்கு ஒற்றுமை இல்லை, இடங்கள் வழங்கியதில் தவறு எனக் கூறுகிறீர்கள்’’ என்றார்.
Tags:    

Similar News