செய்திகள்
கோப்புப்படம்

கேரளாவில் மேலும் 2 பேருக்கு ஜிகா பாதிப்பு

Published On 2021-07-14 02:38 GMT   |   Update On 2021-07-14 02:38 GMT
பூந்துரா பகுதியை சேர்ந்த 35 வயதான ஆண் மற்றும் சாஸ்தா மங்கலத்தை சேர்ந்த 41 வயது பெண் ஆகியோருக்கு நேற்று ஜிகா உறுதியானதாக சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் 19 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று, ஒரு பெண் உள்பட 2 பேருக்கு ஜிகா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் ஜிகா பாதித்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

பூந்துரா பகுதியை சேர்ந்த 35 வயதான ஆண் மற்றும் சாஸ்தா மங்கலத்தை சேர்ந்த 41 வயது பெண் ஆகியோருக்கு நேற்று ஜிகா உறுதியானதாக சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

“வைரஸ் பரிசோதனை, திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் ஆய்வகத்திலும், கோயம்புத்தூர் ஆய்வகம் ஒன்றிலும் உள்ளது. அரசு மருத்துவமனையில் திங்கட்கிழமை முதல் சோதனை தொடங்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக 15 பேரின் மாதிரிகள் சோதிக்கப்பட்டதில் ஒருவருக்கு மட்டும் டெங்கு உறுதியானது. மற்றவர்களுக்கு எந்த வைரஸ் பாதிப்பும் இல்லை” என்று அவர் கூறினார்.
Tags:    

Similar News