செய்திகள்
சிறப்பு ரெயில்

சிறப்பு ரெயில் பயணத்தின்போது இரட்டை குழந்தை பெற்ற இளம்பெண்: அதன்பின் நடந்த பரிதாபம்

Published On 2020-05-22 16:56 GMT   |   Update On 2020-05-22 16:56 GMT
குஜராத் மாநிலத்தில் இருந்து வாரணாசிக்கு சிறப்பு ரெயிலில் பயணம் செய்த பெண் இரட்டை குழந்தைகள் பெற்ற போதும், காப்பாற்ற முடியாத சோக நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கின்ற போதிலும் கடந்த 12-ந்தேதியில் இருந்து ரெயில்வேத்துறை சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது.

இன்று குஜராத் மாநிலம் வாபி என்று இடத்தில் இருந்து 8 மாத கர்ப்பிணியான காயத்ரி தேவி, தனது கணவருடன் உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசிக்கு பயணம் செய்தார்.

இன்று மதிய் 21 வயதான அந்த இளம் பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் ரெயில் பயணம் செய்த பெண்கள் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது காயத்ரி தேவிக்கு இரட்டை குழந்தை பிறந்தது. இரண்டும் ஆண் குழந்தைகள். 8 மாதத்தில் பிறந்ததால் குழந்தைகள் எடை குறைவாக இருந்தன.

அப்பேது ரெயில் குஜராத் மாநிலம் கவுஷாம்பி மாவட்டம் பராவரி என்ற இடத்தை கடந்து சென்றது. உடனடியாக இதுகுறித்து ஆர்பிஎஃப்-க்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சிராத்து என்ற இடத்தில் ரெயிலை நிறுத்த ஏற்பாடு செய்தனர். ரெயில் நின்றதும் ஆம்புலன்ஸ் மூலம் காயத்ரி தேவி மற்றும் இரண்டு குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் டாக்டர்களால் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற முடியவில்லை. ஆனால் காயத்ரியை காப்பாற்றிவிட்டனர். அவரை தனிமை வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கின்றனர்.

‘‘இது குறைமாத பிரசவம். இரண்டு குழந்தைகளும் எடை குறைவாக இருந்தன. மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பாகவே ஒரு குழந்தை இறந்து விட்டது. மற்றொரு குழந்தை உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. நாங்கள் ஆக்சிஜன் கொடுத்து அந்த குழந்தையை பிழைக்க வைக்க முயற்சித்தோம். ஆனால், குழந்தை இறந்து விட்டது’’ என்று கவுஷாம்பி மாவட்ட மருத்துவமனை தலைவர் டாக்டர் தீபக் சேத் தெரிவித்துள்ளார்.

இரட்டை குழந்தைகளை பிறந்தும், உயிர் பிழைக்க முடியாதது சோக நிகழ்வு நடந்தேறியுள்ளது.
Tags:    

Similar News