செய்திகள்
டாக்டர் விகே பால்

கோவேக்சின் தடுப்பூசியை மற்ற கம்பெனிகள் தயாரிக்க பாரத் பயோடெக் சம்மதம்: டாக்டர் விகே பால்

Published On 2021-05-13 12:10 GMT   |   Update On 2021-05-13 12:10 GMT
இந்திய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக், மற்ற நிறுவனங்களும் கோவேக்சின் மருந்தை தயாரிக்க சம்மதம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போதுவரை கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. கோவிஷீல்டு இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்டாஜெனேகாவுடன் இணைந்து கண்டுபிடித்தது.

கோவேக்சின் இந்திய நிறுவனமான பாரத்பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்தது. தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதால், கோவேக்சின் மருந்தை மற்ற நிறுவனங்களும் உற்பத்தி செய்யும் வகையில் மருந்துக்கான பேட்டனை வழங்கலாம் என்ற கருத்து நிலவி வருகிறது.

இந்த நிலையில் நிதி ஆயோக்கின் சுகாதாரத்திற்கான உறுப்பினர் டாக்டர் வி.கே. பால் கூறுகையில் ‘‘கோவேக்சின் மருந்தை மற்ற நிறுவனங்களும் தயாரிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என மக்கள் பேசுகிறார்கள். நாங்கள் இதுகுறித்து ஆலோசனை நடத்தும்போது பாரத் பயோடெக் நிறுவனம் இதை வரவேற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மருந்தால் வைரஸ் செயலிழக்கப்படுகிறது. பிஎஸ்எல்3 ஆய்வகங்களில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.



விரும்பும் நிறுவனத்திற்கு நாங்கள் வெளிப்படையாக அழைப்பு விடுக்கிறோம். விருப்பம் உள்ள நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கலாம். அளவை அதிகரிக்க அரசு உதவி செய்யும்’’ என்றார்.
Tags:    

Similar News