செய்திகள்
மாரத்தான் ஓட்டம்

சென்னையில் ராணுவம் சார்பில் மாரத்தான் போட்டி - 700 பேர் பங்கேற்பு

Published On 2021-02-21 20:31 GMT   |   Update On 2021-02-21 20:31 GMT
இந்தியா-பாகிஸ்தான் போரின் 50-வது ஆண்டை முன்னிட்டு சென்னையில் ராணுவம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது
சென்னை:

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 1971-ம் ஆண்டு கடும் போர் நிலவியது. இந்த போரில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் படைகளை தோற்கடித்து பெரும் வெற்றி கொண்டது. இந்த வெற்றியின் 50-ம் ஆண்டை கொண்டாடும் விதமாகவும், போரில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் பல்வேறு நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் இந்திய ராணுவம் ஏற்பாடு செய்து வருகிறது.

அந்த வகையில் சென்னையில் நேற்று இந்திய ராணுவத்தின் தக்சின் பாரத் பகுதி சார்பில் நேற்று மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. 2, 5, 10 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த மாரத்தானை, 1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் பங்கேற்ற கர்னல் கிருஷ்ணசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது தக்சின் பாரத் பகுதியின் தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் அருண், மத்திய உளவு பிரிவு சிறப்பு இயக்குனர் எ.எஸ்.ராஜன், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்ஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த மாரத்தான் போட்டியில் 700-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மேலும் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News