ஆன்மிகம்
பருவதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில்

மார்கழி மாதப் பிறப்பையொட்டி பருவதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

Published On 2020-12-17 07:09 GMT   |   Update On 2020-12-17 07:09 GMT
பருவதமலை மீது உள்ள மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவிலில் மார்கழி மாதப் பிறப்பையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடந்தது.
மார்கழி மாதப்பிறப்பையொட்டி கலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்மாதிமங்கலத்தில் சுமார் 4,560 அடி உயரம் கொண்ட பருவதமலை மீது ஏறவும், மலையைச் சுற்றி கிரிவலம் செல்லவும், சாமி வீதி உலா வரவும் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தடை விதித்திருந்தார். எனினும், பருவதமலை மீது உள்ள மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவிலில் மார்கழி மாதப் பிறப்பையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடந்தது.

அதேபோல் மலையடிவார கோவிலான மாதிமங்கலம் கிராமத்தில் உள்ள கரைகண்டேசுவரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பல வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்த உற்சவர் வீதி உலா செல்லாமல் பக்தர்கள் வழிபாட்டுக்காக கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்தார்.

மேலும் எலத்தூர் மோட்டூர் நட்சத்திர சிவசுப்பிரமணியசாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. துரிஞ்சாபுரம் ஒன்றியம் தேவனாம்பட்டு கிராமத்தில் தேவகிரிமலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணியசாமி கோவிலிலும் அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.
Tags:    

Similar News