செய்திகள்
கிருஷ்ணகிரியில் தடுப்பூசி போட்டு கொள்ள நீண்ட வரிசையில் காத்திருந்தவர்களை படத்தில் காணலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒரே நாளில் 6,700 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

Published On 2021-06-17 16:22 GMT   |   Update On 2021-06-17 16:22 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 6,700 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது. கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதால், தடுப்பூசி போடும் இடத்தை மாற்றிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பள்ளியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு ஆண்கள், பெண்களுக்கான தனித்தனியாக வரிசை ஏற்படுத்தப்பட்டு, சமூக இடைவெளியுடன் நிற்கும் வகையில் தரையில் வட்டமிடப்பட்டு உள்ளது முன்னதாக தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, நீண்ட நேரம் காத்திருக்கும் முதியவர்கள், பெண்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தரப்பட்டது.

நீண்ட வரிசையில் காத்திருந்த 45 வயதிற்கு மேற்பட்டவர்கள், வாலிபர்கள், இளம்பெண்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மாவட்டத்தில் 49 இடங்களில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்கள், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் என 6,700 பேருக்கு தடுப்பூசி போட்டப்பட்டது.

இதுகுறித்து மருத்துவ அலுவலர்கள் கூறுகையில், கொரோனா சிகிச்சை மையம் உள்ள இடங்களில் செயல்படும் தடுப்பூசி மையங்கள், அரசு பள்ளிகளுக்கு இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி தட்டுப்பாடுகள் முழுமையாக தீர்ந்த பின், தடுப்பூசி போடும் விவரங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றனர்.

Tags:    

Similar News