செய்திகள்
திருப்பதி கோவில்

கொரோனா நிபந்தனைகளை பக்தர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்- திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்

Published On 2021-08-01 08:51 GMT   |   Update On 2021-08-01 08:51 GMT
திருமலைக்கு வரும் பக்தர்கள் பல இடங்களில் முக கவசம் அணியாமல் நடமாடி வருகின்றனர். இதனால் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
திருப்பதி:

கொரோனா தொற்றின் 3-வது அலை பரவலை கருத்தில் கொண்டு மத்திய-மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் கொரோனா நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருமலைக்கு வரும் பக்தர்கள் பல இடங்களில் முக கவசம் அணியாமல் நடமாடி வருகின்றனர். இதனால் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் திருப்பதியில் உள்ள உள்ளூர் கோவில்கள், தேவஸ்தான தலைமை அலுவலக உள்ளிட்ட இடங்களில் கொரோனா விதிமுறைகளான முக கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்டவற்றை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருப்பதியில் நேற்று 20,994 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 9,624 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.1.53 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
Tags:    

Similar News