செய்திகள்
டி.ஆர்.பாலு

மக்களவையில் எதிர்க்கட்சிகள் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது -டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு

Published On 2021-08-11 07:14 GMT   |   Update On 2021-08-11 07:14 GMT
தடுப்பூசி பற்றாக்குறை, மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாக டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே, பெகாசஸ் உளவு சர்ச்சை, வேளாண் சட்டங்கள் ஆகிய பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் பெருமளவு முடங்கி உள்ளன. 

இன்றும் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்ததால் மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. மழைக்கால கூட்டத்தொடரை 13ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டு, நிகழ்ச்சிகள் பட்டியலிடப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, முன்கூட்டியே நிறைவடைந்துள்ளது. இது எதிர்க்கட்சியினரை மேலும் அதிருப்தி அடைய செய்துள்ளது.



மக்களவையில் எதிர்க்கட்சிகள் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், பெகாசஸ் உளவு விவகாரத்தில் இதுவரை மத்திய அரசு விளக்கம் அளிக்கவில்லை என்று  திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டினார்.

மூன்று வேளாண சட்டங்களை திரும்ப பெற வேணடும், தடுப்பூசி பற்றாக்குறை, மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

Tags:    

Similar News