செய்திகள்
பிரதமர் மோடி

பிரதமர் மோடி அக்டோபர் 29ம் தேதி சவுதி அரேபியா செல்கிறார்

Published On 2019-10-22 17:03 GMT   |   Update On 2019-10-22 17:03 GMT
சவுதி அரேபியாவில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அக்டோபர் 29-ம் தேதி அங்கு செல்ல உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:

சவுதி அரேபியாவில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு அக்டோபர் 29 முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.  

இந்நிலையில், சவுதி அரேபியாவில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அக்டோபர் 29-ம் தேதி அங்கு செல்ல உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தனது சுற்றுப்பயணத்தின்போது சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை சந்தித்து இரு தரப்பு  உறவுகள் குறித்து பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த  2016-ம் ஆண்டு பிரதமர் மோடி சவுதி அரேபியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த போது, அவருக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது நினைவிருக்கலாம்.
Tags:    

Similar News