ஆன்மிகம்
வீட்டில் பணத்தட்டுப்பாடு நீங்க செய்ய வேண்டிய விரத பூஜை

வீட்டில் பணத்தட்டுப்பாடு நீங்க செய்ய வேண்டிய விரத பூஜை

Published On 2021-03-12 07:18 GMT   |   Update On 2021-03-12 07:18 GMT
பொருளாதார பற்றாக்குறை என்பது மனிதர்களின் பெரும் குறையாக பாவிக்கப்படும் சூழலில் அந்த பொருளாதாரத்தை வசப்படுத்த ஆன்மீகத்தில் செய்யப்படும் விரத பூஜை என்ன என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.
உணவு, உடை, இருப்பிடம், என ஒரு மனிதனின் செளகரியம், அடிப்படை, வசதி, அந்தஸ்து, மகிழ்ச்சி என அனைத்தின் மூலமாகவும் பணம் இருக்கிறது. ஆனால் பல சமயங்களில் பொருளாதார பற்றாக்குறை என்பது மனிதர்களின் பெரும் குறையாக பாவிக்கப்படும் சூழலில். அந்த பொருளாதாரத்தை வசப்படுத்த ஆன்மீகத்தில் செய்யப்படும் விரத பூஜை என்ன என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

குபேரர் இவர் பணத்தின் அதிபதியான இந்து கடவுளாக விளங்குகிறார். பிரபஞ்சத்தின் அனைத்து வளத்திற்கும் இவரே அதிபதி. இவரை விரதம் இருந்து வணங்கி பூஜைகளை மேற்கொள்கிறவர்கள் பண பற்றாக்குறையை சந்திப்பதில்லை என்பது ஐதீகம்.

இதிகாசங்களில் ராவணன் குபேரனிடம் கடன் பெற்றதாக பதிவுகள் உண்டு. மேலும் இவர் விஷ்ணு பரமார்த்தாவின் ஆடம்பர திருமணத்திற்கு கடளித்ததாகவும் குறிப்புகள் உண்டு. பெரும் வணிக நிறுவனங்கள் ஏன் பல முக்கிய வங்கிகளின் முன்புறம் கூட குபேர சிலை நிறுவப்பட்டிருப்பதை நம்மால் காண முடியும். இவை அனைத்தும் வளத்தை பெருக்க குபேரரின் எத்தனை தேவை என்ற முக்கியத்துவத்தை உணர்த்தும் உண்மைகளாக அமைகின்றன.

முறையான ஆன்மீக முறைகளின் படி குபேர யந்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. அவை தங்கம், வெள்ளி அல்லது ஐம்பொன் ஆகிய உலோகங்களில் செய்யப்படலாம். இந்த யந்திரத்தை முறையாக பராமரித்து பூஜைகள் செய்கிற போது ஒருவருக்கு நேரவிருக்கும் பொருளாதார நெருக்கடி நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த யந்திரத்தை பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம். பூஜையின் போது பூஜை அறையிலும் பின்னர் மீண்டும் அதை பணம் வைக்கும் இடத்திலும் மாற்றி வைக்கலாம்.

குபேர பூஜையை எல்லா நேரத்திலும் செய்யலாம் என்றாலும் கூட இதை செய்வதற்கு உகந்த நேரம் திரயோதசி. பூஜை நேரத்தில் இந்த யந்திரத்தை மஞ்சளாலும், மலர்களாலும் அக்‌ஷதையாலும் அலங்கரிப்பது உகந்தது.

மேலும் குபேரரை வணங்க மற்றொரு வழி, முதல் கடவுள் விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி குபேரரின் தியான மந்திரத்தை 108 முறை சொல்லலாம். கடவுளுக்கு தேன், வெல்லம் மற்றும் உலர் பழங்கள் படைக்கலாம். கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டிய பின் இறுதியாக அந்த யந்திரத்தின் முன் சிறிது நேரம் தியானத்தில் இடுபடலாம்.

குபேரரின் அருளை பெற்றவருக்கு குறையேதுமில்லை!!
Tags:    

Similar News