ஆன்மிகம்
கணக்கன்பட்டி காளிமுத்து சாமி கோவில் கும்பாபிஷேக விழா

கணக்கன்பட்டி காளிமுத்து சாமி கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2021-09-11 06:59 GMT   |   Update On 2021-09-11 06:59 GMT
சேந்தமங்கலம் அருகே உள்ள மலைவேப்பன்குட்டை கணவாய்மேட்டில் கணக்கன்பட்டி காளிமுத்து சாமி கோவில், கொல்லிபாவை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
சேந்தமங்கலம் அருகே உள்ள மலைவேப்பன்குட்டை கணவாய்மேட்டில் கணக்கன்பட்டி காளிமுத்து சாமி கோவில், கொல்லிபாவை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் கணபதி ஹோமம் மற்றும் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.

தொடர்ந்து முதல் காலயாக பூஜை, வாஸ்து சாந்தி, கலசம் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா நடந்தது. திருவண்ணாமலை அரன் ஆசிரம நிறுவனர் கவுசிகன் குருஜி தலைமையில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News