செய்திகள்
வஉசி பள்ளியில் சீரமைப்பு பணிகள் நடப்பதை காணலாம்

நூற்றாண்டு விழா கண்ட வ.உ.சி. பள்ளி பழமை மாறாமல் புதுப்பிப்பு

Published On 2021-10-29 03:00 GMT   |   Update On 2021-10-29 03:00 GMT
நூற்றாண்டு விழா கண்ட புதுவை வ.உ.சி. பள்ளி கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
புதுச்சேரி:

புதுவை மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி. பள்ளி 1887-ம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். நூற்றாண்டுகளை கடந்த இந்த பள்ளி கட்டிடம் தற்போது சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

இந்த பள்ளி கட்டிடத்தை பிரெஞ்சு கலாசாரத்தின் அடிப்படையில் பழமை மாறாமல் புதுப்பிக்க புதுவை அரசு திட்டமிட்டது. இதற்காக ரூ.2 கோடியே 81 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து சீரமைப்பு பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து சீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. கட்டிடத்தின் மீது வளர்ந்திருந்த மரங்கள், செடிகொடிகள் அகற்றப்பட்டு சுவரின் பூச்சுகள் சுரண்டப்பட்டுள்ளன.

கட்டிடத்தின் மேல்தளத்தினை தாங்கும் வகையில் ஆங்காங்கே இரும்புக்கம்பிகள் பொருத்தப்பட்டு தற்போது பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த பணிகளை விரைவாக முடித்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News