செய்திகள்
கைது

திருச்சி விமான நிலையத்தில் ரூ.76 லட்சம் தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது

Published On 2021-03-08 01:23 GMT   |   Update On 2021-03-08 01:23 GMT
சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் இருந்து அதிக அளவில் தங்கம் பறிமுதல் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.
செம்பட்டு:

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் இருந்து அதிக அளவில் தங்கம் பறிமுதல் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று காலை 7.10-க்கு சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 2 பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை தனியே அழைத்து சென்று சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அவர்கள் ரூ.76 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 600 கிராம் தங்கத்தை உடலில் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News