செய்திகள்
ஜேம்ஸ் ஆண்டர்சன்

ஆண்டர்சன் காயம் - தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகல்

Published On 2020-01-09 05:50 GMT   |   Update On 2020-01-09 05:50 GMT
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்து விலகியுள்ளார்.
போர்ட் எலிசபேத்:

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 4 டெஸ்ட் தொடரில் செஞ்சூரியனில் நடந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 107 ரன் வித்தியாசத்திலும், கேப்டவுனில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இங்கிலாந்து 189 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் 1-1 என்ற சமநிலை இருக்கிறது.

3-வது டெஸ்ட் வருகிற 16-ந்தேதி போர்ட் எலிசபெத்திலும், 4-வது டெஸ்ட் 24-ந்தேதி ஜோகன்ஸ்பர்க்கிலும் தொடங்குகிறது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்டிலும் இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஆண்டர்சன் ஆட மாட்டார். இடது விலா எலும்பில் ஏற்பட்ட காயத்தால் அவர் விலகியுள்ளார். இது இங்கிலாந்துக்கு பின்னடைவாகும்.

37 வயதான ஆண்டர்சன் டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீரர் ஆவார். அவர் 151 டெஸ்டில் ஆடி முத்திரை பதித்து உள்ளார்.
Tags:    

Similar News