செய்திகள்
பிரதமர் மோடி

தாய்க்கு மோடி எழுதிய கடிதங்கள் நாளை புத்தகமாக வெளியிடப்படுகிறது

Published On 2020-09-16 06:34 GMT   |   Update On 2020-09-16 06:34 GMT
பிரதமர் மோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாய்க்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு நாளை ஆங்கில புத்தகமாக வெளியிடப்படுகிறது.
புதுடெல்லி:

பிரதமர் மோடி 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாய்க்கு நிறைய கடிதங்கள் எழுதி இருந்தார். அந்த கடிதங்கள் அனைத்தும் சோமைய்யா என்பவர் மூலம் தொகுக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு கடித தொகுப்பு குஜராத் மொழியில் புத்தகமாக வெளியிடப்பட்டது.

இதற்கிடையே அந்த குஜராத்தி புத்தகம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வந்தது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்து உள்ளன.

நாளை (வியாழக்கிழமை) பிரதமர் மோடிக்கு 70-வது பிறந்தநாளாகும். இதையொட்டி மோடி, தனது தாய்க்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு ஆங்கில புத்தகம் நாளை வெளியிடப்படுகிறது.

‘லெட்டர்ஸ் டூ மதர்’ என்று அந்த புத்தகத்திற்கு பெயரிடப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News