தொழில்நுட்பம்

கூகுள் ரிப்ளை - இனி மெசேஜ்களுக்கு நீங்க பதில் அனுப்ப வேண்டாம்

Published On 2018-02-22 09:51 GMT   |   Update On 2018-02-22 09:51 GMT
கூகுள் சார்பில் விரைவில் வெளியிடப்பட இருக்கும் ரிப்ளை எனும் புதிய செயலி, உங்களுக்கு வரும் குறுந்தகவல்களுக்கு பதில் அனுப்பும் பணியை செய்யும்.
சான்ஃபிரான்சிஸ்கோ:

ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் பல்வேறு செயலிகளை கூகுள் வழங்கி வருகிறது. அந்த வகையில் கூகுள் விரைவில் வெளியிட இருக்கும் செயலி ரிப்ளை (Reply) என அழைக்கப்படுகிறது. இன்னும் வெளியிடப்படாததால், இந்த செயலி ஏ.பி.கே. மிரர் (APK Mirror) வலைத்தளம் மூலம் டவுன்லோடு செய்யப்பட்டிருக்கிறது. 

ரிப்ளை ஏ.பி.கே. செயலியில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த செயலி மூன்றாம் தரப்பு செயலிகளில் வரும் குறுந்தகவல்களுக்கு தானாக பதில் அனுப்பும். அந்த வகையில் ஃபேஸ்புக் மெசன்ஜர், ஹேங்அவுட்ஸ், ஸ்லாக், ஸ்கைப் மற்றும் ட்விட்டர் டைரக்ட் செயலிகளில் வரும் குறுந்தகவல்களுக்கு தானாக பதில் அனுப்பும். 



மேலும் இந்த செயலி வாடிக்கையாளர் இருக்கும் லொகேஷனை கண்டறிந்து போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப சரியான பதில் அனுப்புகிறது. இத்துடன் வாடிக்கையாளர் பயணம் செய்யும் போக்குவரத்து முறையை கணக்கிட்டு அதற்கேற்ப பதில் அனுப்பும். வெகேஷன் ரெஸ்பாண்டர் மற்றும் உடனடி குறுந்தகவல்களுக்கு பதில் அனுப்புவது என பிரத்யேக ஆப்ஷன்களும் இந்த செயலியில் வழங்கப்படுகிறது.

இத்துடன் வாடிக்கையாளர்கள் வாகனம் ஓட்டும் போதும், ஓடும் போது, பயணம் செய்யும் போது மற்றும் உறங்கும் போது என வெவ்வேறு நடவடிக்கைகளை பொருத்து ஆட்டோ சைலன்ஸ் செய்யும். புதிய கூகுள் செயலி இந்த ஆண்டு மே மாதம் நடைபெற இருக்கும் கூகுள் IO 2018 நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள் அல்லோ, டுயோ, ஹேங்அவுட்ஸ், மெசேஜஸ் மற்றும் ஸ்பேசஸ் என பல்வேறு செயலிகளை வழங்கி வரும் நிலையில், ரிப்ளை வெறும் குறுந்தகவல் செயலியாக மட்டும் கருத முடியாது. இந்த செயலியில் முந்தைய அல்லோ மற்றும் இதர கூகுள் செயலிகளில் பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு அம்சங்களை கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News