செய்திகள்
அபராதம்

நாமக்கல்லில் கொரோனா விதிமுறை மீறல்: 2 கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Published On 2021-04-30 11:26 GMT   |   Update On 2021-04-30 11:26 GMT
கொரோனா பரவலை தடுக்க 3 ஆயிரம் சதுரஅடிக்கு மேல் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை திறக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
நாமக்கல்:

கொரோனா பரவலை தடுக்க 3 ஆயிரம் சதுரஅடிக்கு மேல் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை திறக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை மீறி நாமக்கல் நகரில் கடைகள் திறக்கப்படுகிறதா? என நேற்று நாமக்கல்லில் நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் உத்தரவின்பேரில் சுகாதார அலுவலர் சுகவனம் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள ஒரு ஜவுளிக்கடை மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடை என 2 கடைகள் இயங்குவது தெரியவந்தது. இதையடுத்து அந்த இரு கடைகளுக்கும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து இதுபோன்ற விதிமுறை மீறல் கண்டறியப்பட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.
Tags:    

Similar News