செய்திகள்
கோப்புப்படம்

மினி கிளினிக்கில் பணியாற்ற நர்சுகளுக்கு நேர்முக தேர்வு

Published On 2021-02-20 17:59 GMT   |   Update On 2021-02-20 17:59 GMT
நெல்லை மாவட்டத்தில் இருந்து நர்சுகள், உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பம் செய்தவர்களை தேர்வு செய்வதற்கான நேர்முகத்தேர்வு நடந்தது.
நெல்லை:

தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மினி கிளினிக்கில் பணியாற்ற டாக்டர்கள், நர்சுகள், உதவி நர்சுகள் நியமனம் செய்ய விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதில் ஏராளமானவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.

நெல்லை மாவட்டத்தில் இருந்து நர்சுகள், உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பம் செய்தவர்களை தேர்வு செய்வதற்காக நேற்று பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி கலையரங்கத்தில் நேர்முகத்தேர்வு நடந்தது. இதற்காக நேற்று காலை முதலே ஆயிரக்கணக்கான நர்சுகள் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் வரதராஜன் மற்றும் அதிகாரிகள் நேர்முகத்தேர்வு நடத்தினார்கள்.

நேர்முகத்தேர்வுக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வந்திருந்தனர். அதிகாரிகள் அவர்களது சான்றிதழ்களை சரிபார்த்து நேர்முகத்தேர்வு நடத்தினர்.
Tags:    

Similar News