ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவில்

நெல்லையப்பர் கோவிலில் 1-ந்தேதி திருவாதிரை திருவிழா கொடியேற்றம்

Published On 2019-12-20 06:50 GMT   |   Update On 2019-12-20 06:50 GMT
நெல்லையப்பர் கோவிலில் மார்கழி திருவாதிரை திருவிழா வருகிற 1-ந்தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நெல்லையப்பர் கோவிலில் மார்கழி திருவாதிரை திருவிழா வருகிற 1-ந்தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதுகுறித்து கோவில் செயல்அலுவலர் நாராயணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரை திருவிழா நடைபெறும். இங்குள்ள தாமிர சபையில் திருநடனக்காட்சி மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இந்த ஆண்டு திருவாதிரை திருவிழா வருகிற 1-ந்தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6.30 மணிக்கு சுவாமி சன்னதியில் கொடியேற்று விழா நடைபெறுகிறது.

திருவிழாவின் ஒரு பகுதியாக சுவாமி கோவில் 2-வது பிரகாரத்தில் உள்ள பெரிய சபாபதி சன்னதி முன்பு 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை காலை 4 மணி முதல் 5 மணி வரை திருவெம்பாவை வழிபாடு நடைபெறுகிறது.

4-ந்தேதி இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரி‌‌ஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் வீதி உலா நடைபெறுகிறது.

9-ந்தேதி 2-வது பிரகாரத்தில் உள்ள வரலாற்று புகழ் வாய்ந்த தாமிர சபையில் இரவு நடராஜ பெருமானுக்கு திருநீராட்டு மற்றும் சிறப்பு தீபாராதனை இரவு முழுவதும் நடைபெறுகிறது. 10-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு தாமிர சபையின் முன்பு உள்ள கூத்த பிரான் சன்னதியில் பசு ஒன்று நிறுத்தப்பட்டு, பசு தீபாராதனை காண்பிக்கப்படும்.

தொடர்ந்து 4 மணிக்கு நடராஜர் திருநடனக் காட்சியான ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News