இது புதுசு
பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ்.

விலை ரூ. 1.16 கோடி தான் - புதிய பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். இந்தியாவில் அறிமுகம்

Published On 2021-12-13 10:49 GMT   |   Update On 2021-12-13 10:49 GMT
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


பி.எம்.டபிள்யூ. நிறுவனம் ஆடம்பர எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பி.எம்.டபிள்யூ. மாடல் ஐ.எக்ஸ். என அழைக்கப்படுகிறது. இது எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் ஆகும். இந்தியாவில் புதிய பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். விலை ரூ. 1.16 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

இந்த மாடல் ஏற்கனவே அறிமுகமான மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி மற்றும் ஜாகுவார் எலெக்ட்ரிக் கார் மாடல்களுடன் இணைகிறது. புதிய பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். சி.பி.யு. முறையில் இந்தியா கொண்டுவரப்படுகிறது. இந்திய சந்தையில் இந்த கார் மெர்சிடிஸ் பென்ஸ் இ.கியூ.சி., ஆடி இ-டிரான் மற்றும் ஜாகுவார் ஐ பேஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.



இந்தியாவில் பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். மாடல் எக்ஸ்-டிரைவ்40 எனும் ஒற்றை வேரியண்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடலின் வினியோகம் ஏப்ரல் 2022 வாக்கில் துவங்குகிறது. இந்த கார் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டுள்ளது. இது அலுமினியம் ஸ்பேஸ் பிரேம் பயன்படுத்துகிறது.

புதிய பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். மாடலில் 76.6 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை காருக்கு 322 பி.ஹெச்.பி. திறன், 630 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்த செய்கின்றன. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 425 கிலோமீட்டர் வரை செல்லும்.
Tags:    

Similar News