தொழில்நுட்பம்
ஆப் இன்னோவேஷன் சேலஞ்ச்

டெவலப்பர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசின் புதிய போட்டி அறிவிப்பு

Published On 2020-07-06 11:18 GMT   |   Update On 2020-07-06 11:18 GMT
இந்தியாவில் உள்ள டெவலப்பர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு நிறுவனங்கள் இணைந்து போட்டி ஒன்றை அறிவித்து இருக்கின்றன.



மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், அட்டல் இன்னோவேஷன் மிஷன் மற்றும் நிதி ஆயோக் உடன் இணைந்து டிஜிட்டல் இந்தியா ஆத்மநிர்பார் பாரத் இன்னோவேஷன் சேலஞ்ச் எனும் போட்டியை ஸ்டார்ட் அப் மற்றும் தொழில்முனைவோருக்காக அறிவித்து இருக்கிறது.

இந்த போட்டியின் மூலம் தலைசிறந்த இந்திய செயலிகள்- அதாவது மக்கள் ஏற்கனவே பயன்படுத்தும், உலக சந்தையில் சவால் விடும் அம்சங்கள் நிறைந்தவைகளை கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது. 



இந்தியர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிற்கும் பயன்தரும் வகையிலான தொழில்நுட்ப சேவைகளை கண்டறிந்து உருவாக்கும் தொழில்முனைவோர் மற்றும் டெவலப்பர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் நிதியுதவி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அதன்படி டெவலப்பர்கள் எட்டு பிரிவுகளின் கீழ் செயலிகளை உருவாக்க வேண்டும்.

மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள போட்டியில் தங்களது கண்டுபிடிப்புகளை சமர்பிக்க ஜூலை 18 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு எட்டு பிரிவுகளில் வெற்றி பெறுவோருக்கு  ரூ. 45 லட்சம் வரை பரிசு வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News