தொழில்நுட்பம்
ஆப்பிள்

சாம்சங் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் புதிய ஐபோன்

Published On 2021-01-07 06:56 GMT   |   Update On 2021-01-07 06:56 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 ப்ரோ மாடல் சாம்சங் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.


ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் 2021 ஐபோன் சீரிஸ் மாடல்களில் இரு டாப் எண்ட் வெர்ஷன்களில் சாம்சங் நிறுவனத்தின் OLED பேனல்கள் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர இந்த ஆண்டு வெளியாகும் நான்கு மாடல்களிலும் OLED டிஸ்ப்ளே வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

எனினும், இரு ஐபோன்களில் மட்டும் LTPO ரக OLED பேனல்கள் வழங்கப்படலாம் என்றும் இவற்றை சாம்சங் டிஸ்ப்ளே உற்பத்தி செய்து வழங்கும் என கூறப்படுகிறது. இந்த டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.



முன்னதாக வெளியான தகவல்களில் ஐபோன் 12 மாடலில் எல்ஜி மற்றும் சாம்சங் நிறுவனங்களின் டிஸ்ப்ளே பயன்படுத்தப்படலாம் என கூறப்பட்டது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் எல்ஜி டிஸ்ப்ளே நிறுவனம் LTPO OLED பேனல்களை வழங்க முடியாது என கூறப்படுகிறது.

2022 ஆம் ஆண்டு வெளியாகும் அனைத்து ஐபோன்களிலும் ஆப்பிள் நிறுவனம் LTPO OLED பேனல்களை வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கென பேனல்களை உற்பத்தி செய்வதில் எல்ஜி நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. 

ஐபோன் 12 சீரிஸ் மாடல்களில் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படும் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், பேட்டரி பேக்கப் குறையலாம் என்ற காரணத்தால் இது வழங்கப்படவில்லை. அந்த வகையில் இந்த அம்சம் ஐபோன் 13 ப்ரோ மாடலில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News