தொழில்நுட்பம்
ரெட்மி போன் கான்செப்ட்

உலகின் அதிக ரெசல்யூஷன் கேமரா கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன்

Published On 2019-11-29 11:48 GMT   |   Update On 2019-11-29 11:48 GMT
சியோமியின் ரெட்மி பிராண்டு உலகின் அதிக ரெசல்யூஷன் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.



சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரெட்மி கே30 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி முதற்கட்டமாக ரெட்மி கே30 ஸ்டான்டர்டு வேரியண்ட் அறிமுகம் செய்யப்படுகிறது.

ரெட்மி கே30 ப்ரோ ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய ரெட்மி கே30 சீரிஸ் ஸ்மார்ட்போனில் அதிக ரெசல்யூஷன் கொண்ட கேமரா சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது.



அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனில் 108 எம்.பி. கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகலாம். ரெட்மி கே30 ஸ்மார்ட்போனில் 5ஜி வசதி வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ரெட்மி கே30 ஸ்மார்ட்போன் சியோமி நிறுவனத்தின் முதல் டூயல் மோட் 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும்.

ரெட்மி கே30 ஸ்மார்ட்போனில் சோனி IMX686 சென்சார், 60 எம்.பி. ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் ரெட்மி கே30 ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் வடிவமைப்பில் இரட்டை செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்பட்டது.

இதுதவிர 6.66 இன்ச் டிஸ்ப்ளே FHD பிளஸ் ரெசல்யூஷன் மற்றும் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்பட்டது. இத்துடன் குவால்காம் நிறுவனத்தின் 7 சீரிஸ் பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் அட்ரினோ 618 GPU, AMOLED பேனல் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கலாம்.
Tags:    

Similar News