செய்திகள்
சுவேந்து அதிகாரி

மேற்கு வங்காள முன்னாள் தலைமை செயலாளரை விசாரிக்க அதிகாரி நியமனம்: சுவேந்து அதிகாரி

Published On 2021-10-13 21:24 GMT   |   Update On 2021-10-13 21:24 GMT
மேற்கு வங்காள மாநிலத்திற்கு பிரதமர் மோடி சென்றிருந்தபோது, அவருடனான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த தலைமை செயலாளரை விசாரிக்க அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய பிரதமர் மோடி கொல்கத்தா சென்றிருந்தார். அப்போது மம்தா பானர்ஜி, தலைமை செயலாளர் அலபான் பந்த்யோபாத்யாய் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவதாக இருந்தது.

ஆனால் பிரதமர் மோடி ஆலோசனை நடைபெறும் இடத்திற்கு வந்து காத்திருந்த பின் மம்தா பானர்ஜி வந்தார். வந்த உடன் புயல் சேதம் குறித்த அறிக்கையை காண்பித்திவிட்டு, ஏற்கனவே புயல் பாதித்த இடத்தை பார்வையிட திட்டமிட்டிருந்தேன், அங்கு செல்கிறேன் எனக் கூறிவிட்டு சென்றுவிட்டார். தலைமை செயலாளரும் சென்றுவிட்டார்.

பிரதமரை காக்க வைத்துவிட்டு முதன்மை செயலாளர் சென்றது தவறான நடத்தை என மத்திய அரசு குற்றம்சாட்டியது. முதன்மை செயலாளர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அவரை தலைமை ஆலோசகரா மம்தா பானர்ஜி நியமித்தார்.



இந்த நிலையில் தவறான நடத்தை குறித்து விசாரணை நடத்த அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பந்த்யோபாத்யாவிடம் விசாரணை நடத்துவார் என மேற்கு வங்காள மாநில எதிர்க்கட்சி தலைவரும், பா.ஜனதாவின் முக்கிய தலைவருமான சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், சட்டத்தை விட யாரும் உயர்ந்தவர்கள் அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News