செய்திகள்
ராஜேஷ் குமார் - கனிமொழி சோமு

மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுகவின் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் போட்டியின்றி தேர்வு

Published On 2021-09-27 10:30 GMT   |   Update On 2021-09-27 11:16 GMT
2 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வாகி இருப்பதால் மாநிலங்களவையில் திமுகவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை:

அதிமுகவின் கேபி முனுசாமி, வைத்திலிங்கம் தங்களது எம்.பி பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு அக்டோபர் 4-ம் தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கனிமொழி சோமுராஜேஷ்குமார் ஆகியோர் 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு போட்டியிடுவதாக திமுக அறிவித்தது.

இதனை தொடர்ந்து சென்னை, தலைமை செயலகத்தில், சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசனிடம் டாக்டர் கனிமொழி சோமு, கே.ஆர்.என் ராஜேஷ்குமார் ஆகியோர் முதல்வர் 
முக ஸ்டாலின்
 முன்னிலையில் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.



இந்நிலையில் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு திமுகவைச் சேர்ந்த டாக்டர் கனிமொழி சோமு, கே.ஆர்.என் ராஜேஷ்குமார் போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என தேர்தல் அதிகாரி சீனிவாசன் அறிவித்தார். தற்போது இவர்கள் இருவரும் தேர்வாகி இருப்பதால் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News