செய்திகள்
விபத்து (மாதிரிப்படம்)

தாயை கொன்ற மகன்-பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால் நிகழ்ந்த சோகம்

Published On 2019-11-05 12:34 GMT   |   Update On 2019-11-05 12:34 GMT
சார்ஜாவில் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்து, மகனால் தாய் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம்:

ஐக்கிய அரபு அமீரக நாட்டில்  லட்சக்கணக்கான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். சிலர் தங்களது குடும்பத்துடனும் அங்கேயே வசித்தும் வருகின்றனர். 

அவ்வகையில், சார்ஜா நகரின் முவெய்லா பகுதியில் உத்தர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் வசித்து வருகின்றனர். அவர்களின் 17 வயது மகன் கார் ஓட்டி பழகுவதற்காக ஓட்டுநர் வகுப்புக்கு சென்று வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை அருகிலிருந்த பூங்காவிற்கு வெளியே அவரின் தாய் அமர்ந்திருந்தார். அப்போது, பயிற்சி வகுப்புகளை முடித்துவிட்டு காரில் வந்த மாணவர் காரை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்தால் கார் அதிவேகத்தில் முன்னோக்கி சென்று அவரது தாயின் மீது ஏறியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 



இதேபோல், துபாயின் ஜெபல் அலி நகரில் நேற்று பள்ளிப் பகுதியில் ஓடிவந்த நான்கு வயது இந்திய சிறுமி கார் மோதி உயிரிழந்தார். காரை பின்னோக்கி இயக்க முயன்ற ஒரு நபர் தவறுதலாக ஆக்சிலேட்டரை மிதித்தால் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் குழந்தையின் தாயும் காயமடைந்தார்.

இச்சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News