செய்திகள்
விமான சேவையை துவக்கி வைத்து டிக்கெட்டை பெற்றுக்கொண்ட மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா

டெல்லி-திருப்பதி ஸ்பைஸ்ஜெட் விமான சேவை- மத்திய மந்திரி தொடங்கி வைத்தார்

Published On 2021-10-17 11:34 GMT   |   Update On 2021-10-17 11:34 GMT
டெல்லி-திருப்பதி விமான போக்குவரத்து தொடங்கியிருப்பதன் மூலம், ஆன்மிக மற்றும் அரசியல் தலைநகரங்கள் இயக்கப்படுவதாக விமான போக்குவரத்து துறை மந்திரி கூறினார்.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விமானங்களை இயக்குகிறது. விமான சேவையை விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா இன்று துவக்கி வைத்து பயண டிக்கெட்டை பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், டெல்லி-திருப்பதி விமான போக்குவரத்து தொடங்கியிருப்பதன் மூலம், ஆன்மிக மற்றும் அரசியல் தலைநகரங்கள் இயக்கப்படுகின்றன என்றார். அத்துடன் டெல்லியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 3.5 கோடி பக்தர்கள் திருப்பதி செல்வார்கள் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஜூலை மாதம் மத்திய பிரதேசத்தில் இருந்து மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களுக்கு 8 புதிய வழித்தடங்களில் 
ஸ்பைஸ்ஜெட்
 விமானங்கள் இயக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்து, அந்த வழித்தடங்களில் விமான சேவை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News