செய்திகள்
ராஜேஷ் தோபே

கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகள்: ராஜேஷ் தோபே தகவல்

Published On 2021-05-17 03:05 GMT   |   Update On 2021-05-17 03:05 GMT
மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் ஏற்பட்ட 1 ஆண்டில் சுமார் 52 பேர் கருப்பு பூச்சை நோய்க்கு பலியாகி உள்ளனர். தற்போது 1,500-க்கும் மேற்பட்டவர்கள் மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
மும்பை :

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் “மியூக்கோர்மைகோசிஸ்” என்ற கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் ஏற்பட்ட 1 ஆண்டில் சுமார் 52 பேர் கருப்பு பூச்சை நோய்க்கு பலியாகி உள்ளனர். தற்போது 1,500-க்கும் மேற்பட்டவர்கள் மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் ஆஸ்பத்திரிகளில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனிவார்டு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

கருப்பு பூஞ்சை நோய் புதிய சவாலாக உள்ளது. இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க காது, மூக்கு, தொண்டை நிபுணா்கள், நரம்பியல் வல்லுநர்கள், பிளாஸ்டிக் சிகிச்சை நிபுணர்கள் என பலர் தேவைப்படுகின்றனர். எனவே கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க ஆஸ்பத்திரிகளில் தனி வார்டு அமைக்க முடிவு செய்து உள்ளோம். இதற்காக தனி டாக்டர் குழுவினர் நியமிக்கப்படுவார்கள்.

மேலும் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க 5 ஆயிரம் ஊசி மருந்துகள் வந்து உள்ளது. இவை ஆஸ்பத்திரிகளுக்கு விரைவில் வழங்கப்படும் மேலும் மருந்துகளும் வாங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News