ஆன்மிகம்
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 4-வது நாள் பாலாலய நிகழ்ச்சி

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 4-வது நாள் பாலாலய நிகழ்ச்சி

Published On 2021-09-14 05:58 GMT   |   Update On 2021-09-14 05:58 GMT
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் பாலாலய நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று வேத மந்திரங்கள் பாராயணம் செய்யப்பட்டது. ர்ணாஹுதி, தெய்வீக சத்துமுறை நடக்கிறது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் விமான கோபுரத்துக்கு தாமிர தகடுகள் பதித்து, அதன் மீது 100 கிலோ எடையில் தங்க முலாம் பூசப்படுகிறது. அதற்காக, கோவிலில் பாலாலய நிகழ்ச்சி நடந்து வருகிறது.

பாலாலய நிகழ்ச்சியின் 4-வது நாளான நேற்று காலை கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜருக்கு தினசரி கைங்கர்யம் நடந்தது. மதியம் பிம்ப வாஸ்து, மகாசாந்தி அபிஷேகம், மாலை வேத பாராயணம், சயநாதி வாசம், ஹோத்ரம், சிறப்பு ஹோமம் ஆகியவை நடந்தது.

மேற்கண்ட நிகழ்ச்சியில் கோவில் சிறப்பு நிலை துணை அதிகாரி ராஜேந்திரடு, ஆகம ஆலோசகர் வேதாந்தம் விஷ்ணு பட்டாச்சாரியார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பாலாலய நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று வேத மந்திரங்கள் பாராயணம் செய்யப்பட்டது. பூர்ணாஹுதி, தெய்வீக சத்துமுறை நடக்கிறது.
Tags:    

Similar News