உள்ளூர் செய்திகள்
தீவிர சிகிச்சை பிரிவை கலெக்டர் சமீரன் பார்வையிட்டார்.

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவு திறப்பு

Published On 2022-04-15 11:10 GMT   |   Update On 2022-04-15 11:10 GMT
ரூ.124 கோடி மதிப்பில் 8 படுக்கைகளுடன் கூடிய பொது தீவிர சிகிச்சைபிரிவு மருத்துவ உள் கட்டமைப்புகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது
பொள்ளாச்சி: 

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ரூ.3.21 கோடி மதிப்பில் 20 படுக்கைகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப்பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக மாற்றப்பட்ட பின்பு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுவருகிறது. 

அதன் ஒரு பகுதியாக தற்போது, ரூ.1.97 கோடி மதிப்பில் 12  படுக்கைகளுடன் கூடிய குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவு மருத்துவ கட்டமைப்புடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
இதேபோல், ரூ.124 கோடி மதிப்பில் 8 படுக்கைகளுடன் கூடிய பொது தீவிர சிகிச்சைபிரிவு மருத்துவ உள் கட்டமைப்புகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

கோவையில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சமீரன், நிகழ்ச்சியில் பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம், பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சந்திரா ஆகியோர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News