செய்திகள்
இம்ரான் கான்

பரிசுப்பொருட்களை பாக். பிரதமர் இம்ரான்கான் விற்றதாக குற்றச்சாட்டு- எதிர்க்கட்சிகள் விமர்சனம்

Published On 2021-10-21 10:09 GMT   |   Update On 2021-10-21 10:09 GMT
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனக்கு வெளிநாடுகள் அளித்த பரிசுப் பொருட்களை விற்று விட்டார் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகளுமான மரியம் நவாஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது தனக்கு கிடைத்த பரிசு பொருட்களை விற்று விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

தலைவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அதே போல் ஒரு நாட்டுக்கு அரசு முறை பயணமாக தலைவர்கள் வரும்போது அந்நாட்டு தலைவர்களுக்கு பரிசுகள் வழங்குவார்கள்.

பாகிஸ்தானில் பரிசு வைப்புத்தொகை விதிகளின் படி, அரசு பயணத்தில் பெறப்படும் பரிசுகள் வெளிப்படையான ஏலத்தில் விற்கப்படாவிட்டால் அரசின் சொத்தாக இருக்கும்.

அதே வேளையில் ரூ.10 ஆயிரத்துக்கு குறைவான பரிசுப் பொருட்களை அதிகாரிகள் தக்க வைத்து கொள்ள விதிகள் உள்ளன.

இந்த நிலையில்தான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனக்கு வெளிநாடுகள் அளித்த பரிசுப் பொருட்களை விற்று விட்டார் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகளுமான மரியம் நவாஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில் இம்ரான்கான், தனக்கு கிடைத்த ரூ.74 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம் உள்பட பல்வேறு பரிசுப் பொருட்களை விற்று உள்ளார் என்று தெரிவித்தார். அதே போல் இதை மற்ற எதிர்க்கட்சிகளும் விமர்சனம் செய்துள்ளன.

இம்ரான்கானுக்கு ஒரு வளைகுடா நாட்டின் இளவரசர் வழங்கிய விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை தனது உதவியாளர் மூலம் துபாயில் விற்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Tags:    

Similar News