ஆட்டோமொபைல்
பஜாஜ் பிளாட்டினா 100 இஎஸ்

பஜாஜ் பிளாட்டினா 100 இஎஸ் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்

Published On 2021-03-04 06:09 GMT   |   Update On 2021-03-04 06:09 GMT
பஜாஜ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பிளாட்டினா 100 இஎஸ் வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது.


பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பிளாட்டினா 100 எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மோட்டார்சைக்கிள் விலை ரூ. 53,920 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புது மாடலில் ஸ்ப்ரிங்-இன்-ஸ்ப்ரிங் ரியர் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. 

இத்துடன் புதிய ரியர் வியூ மிரர்கள், மேம்பட்ட டிசைன் மற்றும் டியூப்லெஸ் டையர்களை கொண்டுள்ளது. சிறு மாற்றங்கள் தவிர பஜாஜ் பிளாட்டினா 100 ரக்கட் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய பிளாட்டினா 100 எலெக்ட்ரிக் ஸ்டார்ட் அம்சம் கொண்ட விலை குறைந்த மாடல் ஆகும்.



புதிய பஜாஜ் பிளாட்டினா 100 எலெக்ட்ரிக் ஸ்டார்ட் வேரியண்ட் காக்டெயில் வைன் ரெட் மற்றும் எபோனி பிளாக் மற்றும் சில்வர் டீகல் நிறங்களில் கிடைக்கிறது. பஜாஜ் பிளாட்டினா 100 மாடலில் 102சிசி, ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. 

இந்த என்ஜின் 7.79 பிஹெச்பி பவர், 8.3 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த மோட்டார்சைக்கிள் 17 இன்ச் அலாய் வீல்கள், முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்களை கொண்டிருக்கிறது. பிரேக்கிங்கிற்கு கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News