தொழில்நுட்பம்

கூகுள் பிளே தளத்தில் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

Published On 2019-04-09 05:30 GMT   |   Update On 2019-04-09 10:16 GMT
கூகுள் நிறுவனத்தின் புதிய பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் கூகுள் பிளே தளத்தில் வெளியாகியிருக்கிறது. #Pixel3a



கூகுள் பிளே டெவலப்பர் கன்சோல் தளத்தில் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனின் விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. அதன்படி புதிய பிக்சல் ஸ்மார்ட்போனில் 2220x1080 பிக்சல் FHD+ 440 PPI ரக டிஸ்ப்ளே, பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனில் 2160x1080 பிக்சல் FHD+ 440 PPI டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன்களில் முறையே 5.6 இன்ச் மற்றும் 6.0 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களிலும் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் இதே அளவு ஸ்கிரீன் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. முன்னதாக பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போன்கள் சார்கோ மற்றும் பொனிட்டோ என்ற பெயர்களில் உருவாக்கப்படுவதாக கூறப்பட்டது.

கடந்த வாரம் வெளியான ஆண்ட்ராய்டு கியூ பீட்டாவில் புதிய ஸ்மார்ட்போன் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL என்ற பெயர்களில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வரிசையில் தற்சமயம் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் வெளியாகி்யிருக்கிறது.



இதில் பிக்சல் 3ஏ ஸ்மார்ட்போனில் 5.6 இன்ச் FHD+ OLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 670 பிராசஸரும், பிக்சல் 3ஏ XL ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் இரு ஸ்மார்ட்போன்களிலும் 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. அல்லது 64 ஜி.பி. மெமரி, 12 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி, வைடு-ஆங்கிள் செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என தெரிகிறது.

புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களின் பின்புறம் கைரேகை சென்சார், ஆக்டிவ் எட்ஜ் அம்சங்கள் மற்றும் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. தற்போதைய பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களில் ஹெட்போன் ஜாக் வழங்கப்படவில்லை.



கூகுள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

- பிக்சல் 3ஏ: 5.6 இன்ச் 2220x1080 பிக்சல் FHD+ OLED 18.5:9 டிஸ்ப்ளே, 440 PPI
- பிக்சல் 3ஏ XL: 6.0 இன்ச் 2160x1080 பிக்சல் FHD+ OLED 18:9 டிஸ்ப்ளே, 400 PPI
- பிக்சல் 3ஏ: ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 670 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 615 GPU
- பிக்சல் 3ஏ XL: ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்
- அட்ரினோ 616 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. / 64 ஜி.பி. மெமரி
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8 எம்.பி. வைடு-ஆங்கிள் செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- ஆக்டிவ் எட்ஜ்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
- 3,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங்

கூகுள் நிறுவனம் புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களை ஜூன் மாதத்திற்குள் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகைப்படம் நன்றி: OnLeaks | 91mobiles
Tags:    

Similar News