லைஃப்ஸ்டைல்
முள்ளங்கி சட்னி

10 நிமிடத்தில் சூப்பரான சட்னி செய்யலாமா?

Published On 2021-03-06 05:36 GMT   |   Update On 2021-03-06 05:36 GMT
எப்பொழுதும் கார சட்னி, தேங்காய் சட்னி என்று சாப்பிட்டு நாக்கு செத்துவிட்டதா. சரி வாங்க இன்று 10 நிமிடத்தில் சூப்பரான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :

முள்ளங்கி - 2 கப்
வெங்காயம் - 2
கடலை பருப்பு - 2 ஸ்பூன்
தனியா - 2 ஸ்பூன்
வரமிளகாய் - 4
பூண்டு பல் - 2 பல்
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :

வெங்காயம், முள்ளங்கியை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு, தனியா, பூண்டு, வரமிளகாய் ஆகியவை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பிறகு வெங்காயம், சிறிதளவு உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர் நறுக்கிய முள்ளங்கி சேர்த்து ஒரு 10 நிமிடம் மூடி வேக வைக்கவும்.

நன்கு வெந்தவுடன் வதக்கிய பொருள்களை நன்றாக ஆற வைத்து பின்பு மிக்சியில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவை கொண்டு தாளித்து சட்னியில் ஊற்றினால் சுவையான முள்ளங்கி சட்னி தயார்..

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News