செய்திகள்
ராகுல் காந்தி டுவிட்டர் பக்கத்தின் முகப்பு

ராகுல் காந்திக்கு டுவிட்டரில் பெருகும் ஆதரவு - அபிமானிகள் எண்ணிக்கை ஒரு கோடியாக உயர்வு

Published On 2019-07-10 08:50 GMT   |   Update On 2019-07-10 09:52 GMT
காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்திக்கு டுவிட்டரில் பெருகும் ஆதரவால் தற்போது அவரை ஒரு கோடிக்கும் அதிகமான அபிமானிகள் பின்தொடர்கின்றனர்.
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சந்தித்த மிகப்பெரிய பின்னடைவுக்கு தார்மீக பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது தேசிய தலைவர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா இன்னும் ஏற்கப்படாமல் உள்ள நிலையில்  ராகுல் காந்திக்கு டுவிட்டரில் ஆதரவு பெருகி வருகிறது.

டுவிட்டர் பக்கத்தை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி பிரமுகர்களில் இதற்கு முன் அதிக செல்வாக்கு படைத்த நபராக மத்திய முன்னாள் மந்திரி சசி தரூர் இடம் பிடித்திருந்தார். கடந்த ஆண்டு நிலவரப்படி இவரை 69 லட்சம் அபிமானிகள் பின்தொடர்ந்தனர்.

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் இருந்து ராகுல் காந்தியை டுவிட்டரில் பின்தொடரும் ஃபாலோவர்களின் எண்ணிக்கை தற்போது ஒருகோடியை கடந்துள்ளது.



இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ‘என்னை பின்தொடரும் அனைவருக்கும்.., ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்று அமேதிக்கு செல்லும் நான் அங்குள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் இந்த மகிழ்ச்சியை கொண்டாடுவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் அதிக பிரசித்தி பெற்ற பிரபலமாக பிரதமர் நரேந்திர மோடியை 4 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News