உள்ளூர் செய்திகள்
ஊஞ்சல் உற்சவம்

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்- ஊஞ்சல் உற்சவம்: திரளான பக்தர்கள் தரிசனம்

Published On 2022-04-17 11:52 GMT   |   Update On 2022-04-17 11:52 GMT
பவுர்ணமி கிரிவலம் மற்றும் ஊஞ்சல் உற்சவத்தை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம், விசே‌ஷ பூஜை, மகாதீபாராதனை ஆகியவை நடந்தது.
பண்ருட்டி:

மிகவும் பிரசித்திபெற்ற திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் சித்ரா பவுர்ணமி தினமான நேற்று மாலை பவுர்ணமி கிரிவலம், ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாலை 4 மணிக்குசாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரம், விசே‌ஷ பூஜை, மகா தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து மாலை 6 மணிக்கு மாடவீதியை 16 முறை வலம் வரும் கிரிவல நிகழ்ச்சி தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்தி கடனுக்காகவும் கிரிவலம் வந்தனர்.

இரவு 7 மணிக்கு உற்சவர் அம்பாள் பெரியநாயகி சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு பவுர்ணமி சிறப்பு பூஜை நடைபெற்றது.

பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், உற்சவதாரர் அசோக்ராஜ் குடும்பத்தினர் செய்தனர்.
Tags:    

Similar News