தொழில்நுட்பம்
ரெட்மி 9

ரெட்மி 9 இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

Published On 2020-08-21 05:28 GMT   |   Update On 2020-08-21 05:28 GMT
ரெட்மி பிராண்டு தனது புதிய ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

சியோமி இந்தியா நிறுவனம் தனது ரெட்மி 9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி அறிமுகமாகும் என தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறது. புதிய ரெட்மி 9 ஏற்கனவே மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 9சி மாடலின் மற்றொரு வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது.

முன்னதாக சியோமி நிறுவனம் ரெட்மி 9 ஸ்மார்ட்போனினை ஜூன் மாத வாக்கில் ஸ்பெயின் நாட்டில் அறிமுகம் செய்தது. பின் இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ரெட்மி 9 பிரைம் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.



புதிய ரெட்மி 9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகமாகிறது. இந்த ஸ்மார்ட்போன் அதிக ரேம் மற்றும் மெமரி கொண்டிருக்கும் என சியோமி அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதன் கேமரா சற்றே மேம்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.

இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வழங்கப்பட இருப்பது சியோமி வலைதளத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் ஆரஞ்சு மற்றும் புளூ நிறங்களில் வெளியாகும் என தெரிகிறது. முன்னதாக ரெட்மி 9சி ஸ்மார்ட்போன் சன்ரைஸ் ஆரஞ்சு மற்றும் டுவிலைட் புளூ நிறங்களில் வெளியிடப்பட்டது.
Tags:    

Similar News