வழிபாடு
திருப்பதி

திருப்பதியில் ஒரு நாள் பிரம்மோற்சவம்

Published On 2022-02-10 09:02 GMT   |   Update On 2022-02-10 09:02 GMT
திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் ரத சப்தமி அன்று ஒரு நாள் பிரம்மோற்சவம் நடைபெறும். இதனை ‘சிறிய பிரம்மோற்சவம்’ என்பார்கள்.
ரத சப்தமி அன்று, திருப்பதி திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி ஆலயத்தில் ஒரு நாள் பிரம்மோற்சவம் நடைபெறும். இதனை ‘சிறிய பிரம்மோற்சவம்’ என்பார்கள்.

இந்த ரதசப்தமியின் ஒரே நாளில், ஸ்ரீதேவி- பூதேவி உடனாய மலையப்ப சுவாமி, 7 வாகனங்களில் மாட வீதிகளில் உலா வருவார். அன்று அதிகாலை 5.30 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும், காலை 9 மணிக்கு சின்ன ஆதிசேஷன் வாகனத்திலும், 11 மணிக்கு கருட வாகனத்திலும், பகல் 1 மணிக்கு அனுமன் வாகனத்திலும் வலம்வருவார்.

பகல் 2 மணிக்கு சக்கர ஸ்நானம் நடைபெறும். மாலை 4 மணிக்கு கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை 6 மணிக்கு சர்வ பூபால வாகனத்திலும், இரவு 8 மணிக்கு சந்திர பிரபையிலும் சுவாமி வலம் வருவார்.
Tags:    

Similar News