ஆன்மிகம்
பீளிக்கான் முனீஸ்வரர் கோவில் திருவிழா

பீளிக்கான் முனீஸ்வரர் கோவில் திருவிழா: திரளான பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து வழிபாடு

Published On 2021-04-10 03:44 GMT   |   Update On 2021-04-10 03:44 GMT
பீளிக்கான் முனீஸ்வரர் கோவில் திருவிழாவில் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகுகுத்தியும், அக்னிசட்டி மற்றும் பால்குடம் எடுத்து கிராமபுறப்பகுதிகளில் ஊர்வலமாக வலம்வந்து பின்னர் கோவிலுக்கு வந்து அங்காள ஈஸ்வரிக்கு பால்அபிஷேகம் செய்தனர்.
திருச்சி விமானநிலைய பகுதியில் உள்ள அங்காள ஈஸ்வரி, பீளிக்கான் முனீஸ்வரர் கோவில் திருவிழா கடந்த 2-ந்தேதி காப்புகட்டுதல் மற்றும் கொடியேற்றுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்பாள் அக்னிகரகத்துடன் கிராமங்கள் தோறும் வலம்வந்தார்.

நேற்று அம்பாள் சக்தி கரகத்துடன், பால்குடம் எடுத்துவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொட்டப்பட்டு கருப்பண்ணசுவாமி கோவிலில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகுகுத்தியும், அக்னிசட்டி மற்றும் பால்குடம் எடுத்து கிராமபுறப்பகுதிகளில் ஊர்வலமாக வலம்வந்து பின்னர் கோவிலுக்கு வந்து அங்காள ஈஸ்வரிக்கு பால்அபிஷேகம் செய்தனர்.

இன்று (சனிக்கிழமை) முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய கொரோனா தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள் நேற்றே பால்குடம், அக்னிசட்டி ஏந்திவந்து வழிபாடு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News