உள்ளூர் செய்திகள்
ஆலங்கட்டி மழை

ஆனைமலையில் திடீர் ஆலங்கட்டி மழை

Published On 2022-04-16 09:49 GMT   |   Update On 2022-04-16 09:49 GMT
தென்தமிழக கடலோர பகுதிகளில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
ஆனைமலை: 

தமிழகத்தின் தென்தமிழக கடலோர பகுதிகளில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒரு வார காலமாக மழை பெய்து வருகிறது.

ஆனைமலை தாலுகாவுக்குட்பட்ட அங்கலக்குறிச்சி, கோட்டூர், ஆழியார், உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் ஆலங்கட்டி மழை பெய்யது. மழைத்துளி விழுந்தவுடன் அப்பகுதி மக்கள் ஆலங்கட்டி மழையை கையில் ஏந்தி மகிழ்ந்தனர். 

இந்த ஆலங்கட்டி மழையானது பல ஆண்டுகளுக்கு பிறகு பொள்ளாச்சியின் தெற்கு பகுதியான மலைய டிவாரத்தில் அமைந்துள்ள அங்கலக்குறிச்சி பகுதிகளில் பெய்துள்ளது. இந்த மழை காரணமாக விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஒரு மாத காலமாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் வனக்குட்டைகள், ஏரி, குளங்கள், விவசாய கிணறுகள் என அனைத்திலும் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
Tags:    

Similar News