செய்திகள்
கோப்புபடம்

ஆசிரியர்கள் காலிப்பணியிடம்-விவரம் சேகரிப்பு

Published On 2021-06-10 09:43 GMT   |   Update On 2021-06-11 02:47 GMT
கொரோனா பரவல் முடிவுக்கு வந்து பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதால் அதற்குள் காலிப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
உடுமலை:

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கடந்த இரு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. ஏற்கனவே 3 ஆயிரம் பணியிடங்கள் காலியாகி இருந்த நிலையில் தற்போது மேலும் அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் முடிவுக்கு வந்து பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதால் அதற்குள் காலிப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட  கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பாடவாரியாக கேட்கப்பட்டுள்ளன. இதற்கென படிவங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தந்த தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியின் காலிப்பணியிட விவரங்களை பூர்த்தி செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News