செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை கடந்தது - புதிதாக 199 பேருக்கு தொற்று

Published On 2020-08-03 02:07 GMT   |   Update On 2020-08-03 02:07 GMT
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 199 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் மாவட்டத்தின் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது. 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 67,120 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 8,833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 9,439 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. இதில் 6,041 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 7 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 728 பேர் வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 1,300 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்த 54 ,42, 57, 48 வயது பெண்கள், புதுரெயில்வே காலனியை சேர்ந்த 33 வயது நபர், முத்தால் நகரை சேர்ந்த 43 வயது நபர், பழைய ரெயில்வே காலனியை சேர்ந்த 33 வயது பெண், அன்னை சிவகாமிபுரத்தை சேர்ந்த 32 வயது பெண், ராமன்தெருவை சேர்ந்த 22 வயது பெண், பெரியார்பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், சத்திரரெட்டியப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த 48 வயது நபர், அய்யனார்நகரை சேர்ந்த 38 வயது பெண், தர்காதெருவை சேர்ந்த 24 வயது நபர், தீயணைப்பு குடியிருப்பை சேர்ந்த 40 வயதுநபர், சின்னமூப்பன்பட்டியை சேர்ந்த 20 வயது வாலிபர், பாலன்நகரை சேர்ந்த44 வயது நபர், பெத்தனாட்சிநகரை சேர்ந்த 68 வயது முதியவர் உள்ளிட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

சிவகாசி ஆனையூரை சேர்ந்த 49 வயது பெண், ராஜதுரை நகரை சேர்ந்த 54 வயது, 47 வயது நபர்கள், 20 வயது பெண், 3 வயது குழந்தை, சோலைகாலனியை சேர்ந்த 54 வயது நபர் உள்ளிட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர். தமிழ்பாடியை சேர்ந்த 4 பேர், கோவிலாங்குளத்தை சேர்ந்த 7 பேர், அழகாபுரி, நரிக்குடி, பனையடிப்பட்டி, புல்லக்கவுண்டன்பட்டியை சேர்ந்த 6 பேர், ராஜபாளையம் பகுதியை சேர்ந்த 31 பேர், சுந்தரபாண்டியம், தேவதானம், மேலதுரசிங்காபுரத்தை சேர்ந்த 17 பேர், தளவாய்புரத்தை சேர்ந்த 5 பேர், முத்துச்சாமிபுரம், அருள்புதூர், சேத்தூர், செட்டியார்பட்டி, சொக்கநாதன்புதூர், மல்லாங்கிணறை சேர்ந்த 5 பேர், காரியாபட்டியை சேர்ந்த 3 பேர், டி.கடம்பன்குளத்தை சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 199 பேர்பாதிப்பு அடைந்துள்ளனர். இந்தநிலையில் விருதுநகரை சேர்ந்த 72 வயது தொழில் அதிபர் உள்பட 7 பேர் பலியானதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 101 ஆக உயர்ந்தது.

இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 32 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 3,200 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் தெரிய வேண்டிய மருத்துவ பரிசோதனை முடிவுகள் 9 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது. மருத்துவ பரிசோதனை செய்து கொரோனா தொற்றை உறுதி செய்வதில் மருத்துவ ரீதியான குழப்பம் இருந்ததால் கடந்த காலங்களில் நோய் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாகவும், தற்போது புதிய வழிக்காட்டுதல் முறைப்படி மருத்துவ பரிசோதனை செய்வதால் நோய் தொற்று எண்ணிக்கை குறைவதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு சரியானதாக இருக்கும் என்பதை மாவட்ட நிர்வாகம் தெளிவுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News