செய்திகள்
கோப்புபடம்

தமிழக கடலோர மாவட்டங்களில் 9 டிகிரி வரை வெப்பநிலை உயரும் - வானிலை மையம் அறிவிப்பு

Published On 2021-05-02 07:54 GMT   |   Update On 2021-05-02 07:54 GMT
ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் இன்று இரவு 11.30 மணி முதல் கடல் அலைகள் ஒரு மீட்டர் முதல் 2.5 வரை எழும்பக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை:

தமிழக கடலோர மாவட் டங்களில் 9 டிகிரி வரை வெப்ப நிலை உயரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரி கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தொடங்கி 5-ந் தேதி வரை மேற்குதொடர்ச்சி மலையை யொட்டிய மாவட்டங்களிலும், 2, 4, 5-ந் தேதிகளில் சேலம், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களிலும், 3-ந் தேதி திருநெல்வேலி, கன்னியாகுமரி, 5-ந் தேதி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.


மற்ற மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். கடலோர மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் 90 சதவீதம் வரை உள்ளதால் காற்றின் இயல்பான வெப்ப நிலை 9 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகமாக உணரப் படும்.

இதன் காரணமாக நாளை முதல் மறுநாள் காலை வரை புழுக்கமான சூழல் நிலவ வாய்ப்பு உள்ளது.

ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் இன்று இரவு 11.30 மணி முதல் கடல் அலைகள் ஒரு மீட்டர் முதல் 2.5 வரை எழும்பக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News