ஆன்மிகம்
நாகர்கோவில், வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழாவில் கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா கொடியேற்றம்

Published On 2019-11-16 03:19 GMT   |   Update On 2019-11-16 03:19 GMT
நாகர்கோவில், வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில், வெட்டூர்ணிமடம் கிறிஸ்துநகரில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி ஆலய வளாகம் முழுவதும் நேற்று வண்ண அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. முதல் நாளான நேற்று மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை நடைபெற்றது. இரவு 7.15 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து திருப்பலி நடந்தது.

கொடியேற்றத்தின்போது ஆலய பங்குபேரவை துணை தலைவர் ஜாய் சிங் மரிய ஜாண், செயலாளர் மரிய ஜாண் சேவியர், பொருளாளர் கிளாடிஸ் பியூலா, துணை செயலாளர் பேபி, பங்குத்தந்தை அருள் ஆனந்த் உள்பட பலர் உடனிருந்தனர். நிகழ்ச்சியில் அருட்சகோதரிகள், ஆலய நிர்வாகிகள் மற்றும் திரளான பங்குமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து வருகிற விழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது. 23-ந் தேதி காலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருமுழுக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு சிறப்பு ஆராதனை போன்றவை நடைபெறும்.

திருவிழாவின் இறுதி நாளான 24-ந் தேதி காலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 7.30 மணிக்கு திருவிழா திருப்பலி, மாலை 5.30 மணிக்கு நன்றி திருப்பலியை தொடர்ந்து கொடியிறக்கம் ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News