ஆட்டோமொபைல்

கவாசகி வல்கன் எஸ் 650 இந்தியாவில் வெளியானது

Published On 2017-12-30 09:43 GMT   |   Update On 2017-12-30 09:43 GMT
இந்தியாவில் ஏற்கனவே முன்பதி்வு செய்யப்பட்டு வந்த கவாசகி வல்கன் எஸ் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

கவாசகி வல்கன் எஸ் மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டது. புதிய கவாசகி வல்கன் எஸ் இந்தியாவில் ரூ.5.44 லட்சம் முதல் துவங்குகிறது. புதிய கவாசகி க்ரூஸ் மாடல் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. எனினும் இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி, நடைபெற்று வருகிறகது.

இந்தியாவில் கவாசகி நிறுவனத்தின் முதல் க்ரூஸ் மாடல் 649 சிசி, லிக்விட் கூல்டு, பேரலெல் டுவின் இன்ஜின் கொண்டு இயங்குகிறது. இந்த இன்ஜின் 60 பி.எச்.பி. பவர் @ 7,500 ஆர்.பி.எம். மற்றும் 63 என்.எம். டார்கியூ @ 6,600 ஆர்.பி.எம். பவர் கொண்டுள்ளது.

புதிய வல்கன் எஸ் மாடல் அதிக உறுதியான ஸ்டீல் டைமண்ட் ஃபிரேம் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் மொத்த எடை 235 கிலோ என்பதோடு புதிய மாடலில் ஃபியூயல் இன்ஜெக்டெட் ரக இன்ஜின் வழங்கியுள்ளதாக கவாசகி அறிவித்துள்ளது. இந்த இன்ஜின் க்ரூஸ் மாடலுக்கு ஏற்ப குறைந்த மற்றும் நடுத்தர பயன்பாடுகளுக்கு ஏற்ப சீரான செயல்திறன் வழங்கும்.

அலாய் வீல் மற்றும் பின்புற மோனோஷாக் அம்சம் புதிய க்ரூஸ் மாடலுக்கு ஸ்போர்ட் அம்சங்களை வழங்குகிறது. இத்துடன் அனைத்து வித உயரம் கொண்டவர்களுக்கும் சவுகரியமாக உணர செய்ய எர்கோ ஃபிட் எனும் அம்சம் வழங்கப்ட்டுள்ளது. இந்த அம்சம் கொண்டு வாகனத்தை ஓட்டுபவர், ஹேன்டிள், ஃபூட்பெக் மற்றும் இருக்கையை தன் வசதிக்கு ஏற்ப மாற்றியமைத்து கொள்ள முடியும்.

முன்புறம் 300 மில்லிமீட்டர் டிஸ்க் மற்றும் பின்புறம் 250 மில்லிமீட்டர் டிஸ்க் மற்றும் ABS வசதி வழங்கப்படுகிறது. வல்கன் எஸ் மாடலில் 14 லிட்டர் ஃபியூயல் டேன்க் வழங்கப்பட்டிருப்பதால் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. 
Tags:    

Similar News