செய்திகள்
மழை

தர்மபுரி மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை

Published On 2019-11-27 12:48 GMT   |   Update On 2019-11-27 12:48 GMT
தர்மபுரி மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தர்மபுரி:

தருமபுரி மாவட்டத்தில் கடந்த 3 மாதகாலமாக தொடர்ந்து மழைபெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து நேற்றும் காலை முதல் தருமபுரியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலையில் தர்மபுரியில் சாரல் மழைபெய்தது. இப்படி பெய்தமழை விடாமல் தூரல்போட்டுக் கொண்டே இருந்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. மேலும் பள்ளமான பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. 

இந்த மழையினால் தருமபுரி பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ந்தகாற்று வீசியது. இதேப்போன்று அரூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 
இன்று காலை 8 மணி நிலவரப்படி மழைவிவரம் வருமாறு:-

அதிகபட்சமாக அரூரில் 7 மில்லி மீட்டர் மழையும், தர்மபுரியில் 3 மில்லி மீட்டர் மழையும், பாப்பிரெட்டிப்பட்டியில் 2 மில்லி மீட்டர் மழையும் மற்றும் பென்னாகரத்தில் 1 மில்லி மீட்டர் மழையும்  பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டம் முழுவதும் மொத்தம் 13 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
Tags:    

Similar News