செய்திகள்
நிலச்சரிவு

கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஜப்பான் பிரதமர் இரங்கல்

Published On 2021-10-22 19:40 GMT   |   Update On 2021-10-22 19:40 GMT
கேரளாவில் பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
டோக்கியோ:

இந்தியாவின் கேரளா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கனமழை பெய்தது. இந்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு என பல்வேறு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டது. 

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி கேரளாவில் 42 பேர், உத்தரகாண்டில் 75 பேர் என 117 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் நிலச்சரிவில் சிக்கியதால் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தியாவின் கேரளா மற்றும் உத்தரகாண்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜப்பான் பிரதமர் கிஷிடா எழுதியுள்ள கடிதத்தில், கேரளா மற்றும் உத்தரகாண்டில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளை விரைவாக புனரமைக்க வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News