செய்திகள்
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் மஞ்சள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ள காட்சி.

வேலூரில் பொங்கல் விற்பனை களை கட்டியது காய்கறிகள் விலை உயர்வு

Published On 2020-01-13 11:41 GMT   |   Update On 2020-01-13 11:41 GMT
வேலூர் மார்க்கெட்டில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியுள்ளதால் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.

வேலூர்:

வேலூர் மார்க்கெட்டில் பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியது. லாங்கு பஜாரில் இன்று அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து கரும்பு, பொங்கல் பானை, காய்கறிகளை வாங்கி சென்றனர்.

கடந்தாண்டை போலவே கரும்பு விலையில் பெரிய மாற்றம் இல்லை. 18 முதல் 20 கரும்புகள் இருக்கும் ஒரு கட்டு ரூ.300 முதல் ரூ.350 வரை விற்கப்படுகிறது. சிதம்பரம் ,கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செங்கரும்புகள் வேலூரில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

பொங்கல் பானை ரூ.30 முதல் ரூ.300 வரை விற்கப்படுகிறது. திருஷ்டி பூசணி 1 கிலோ ரூ.15 வரையும், பனை கிழங்கு 1 கட்டு ரூ.100, கருணைக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளி கிழங்கு கிலோ ரூ.40, வெங்காயம் கிலோ ரூ.40, சின்ன வெங்கயாம் ரூ.150, தக்காளி கிலோ ரூ.25,-க்கு விற்பனையாகிறது.

வேலூர் மார்க்கெட்டில் இன்று காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. அதன் விவரம் (கிலோ ரூ.) வருமாறு:- உருளைக்கிழங்கு ரூ.30, கத்தரிக்காய் ரூ.60, பீன்ஸ் ரூ.60, அவரைக்காய் ரூ.50, வெண்டக்காய் ரூ.30, முருங்கைகாய் ரூ.250, கேரட் ரூ.60, வள்ளிக்கிழங்கு ரூ.30, பிடிகருணை, வெத்தலை வள்ளி ரூ.40க்கும் விற்கப்படுகிறது.

லாங்கு பஜாரை போலவே நேதாஜி மார்க்கெட், வேலூர் மற்றும் காட்பாடி உழவர் சந்தைகள், சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே உள்ள கடைகளிலும் பொங்கல் பொருட்கள் விற்பனைகளை கட்டியுள்ளது.

இதேபோல் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் பொங்கல் விற்பனை களை கட்டியது. பஜார் வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

Tags:    

Similar News