செய்திகள்
சதானந்தகவுடா

கர்நாடகத்திற்கு 2.62 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் ஒதுக்கீடு: சதானந்தகவுடா

Published On 2021-05-08 03:04 GMT   |   Update On 2021-05-08 03:04 GMT
வருகிற 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலான பயன்பாட்டிற்காக மாநிலங்களுக்கு மொத்தம் 19.2 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் (வயல்ஸ்) ஒதுக்கப்பட்டுள்ளன.
பெங்களூரு :

மத்திய மந்திரி சதானந்தகவுடா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

வருகிற 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலான பயன்பாட்டிற்காக மாநிலங்களுக்கு மொத்தம் 19.2 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் (வயல்ஸ்) ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் கர்நாடகத்திற்கு 2 லட்சத்து 62 ஆயிரத்து 346 ரெம்டெசிவிர் குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது மொத்த ஒதுக்கீட்டில் 13.6 சதவீதம் ஆகும். கடந்த ஏப்ரல் 21-ந் தேதி பல்வேறு மாநிலங்களுக்கு 53 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் ஒதுக்கப்பட்டன. இதில் கர்நாடகத்தின் பங்கு 5.75 சதவீதமாக இருந்தது.

இவ்வாறு சதானந்தகவுடா தெரிவித்துள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "கர்நாடகத்திற்கு 2 லட்சத்து 62 ஆயிரத்து 346 ரெம்டெசிவிர் குப்பி மருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக பிரதமருக்கும், மத்திய மந்திரி சதானந்தகவுடாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News